எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
Sholavandan King 24x7 |1 Sep 2024 2:10 AM GMT
அனைத்து உறுப்பினர்களும் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர்
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தலைவர் மோகனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜவடிவேல் வரவேற்றார். பார்வையாளராக மதுரை கிழக்கு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சிவபார்வதி கலந்து கொண்டார். ஆசிரியர் அருவகம் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு, தலைவர், துணைத் தலைவர், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்படும் முறை குறித்து விளக்கம் அளித்தார். மறு கட்டமைப்பு நடைபெற்று பள்ளி மேலாண்மை குழு தலைவராக தஸ்லிம் பானு துணைத் தலைவராக நாகலட்சுமி முன்னாள் மாணவர் பொது முகமது காமில், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் காளீஸ்வரி மற்றும் 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி துணை தலைவர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். அனைத்து உறுப்பினர்களும் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. மறு கட்டமைப்பில் ஏராளமான பெற்றோர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.
Next Story