மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மொக்கத்தாண்பாறை கிராமத்தில் கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா ஆய்வு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மொக்கத்தாண்பாறை கிராமத்தில் கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா  ஆய்வு
ரூபாய் 40.34 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய10 புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிகள்
மதுரை மாவட்டம் மொக்கத்தாண்பாறை கிராம மலைவாழ் மக்கள் நலனுக்காக ரூபாய் 40.34 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய10 புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர். மோனிகா ராணா, இ.ஆ.ப, அவர்கள் செய்தியாளர்கள் உடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம். சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மொக்கத்தாண்பாறை கிராமத்தில் மலைவாழ் மக்கள் நலனுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தலா 4 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர். மோனிகா ராணா, இ.ஆ.ப. அவர்கள் செய்தியாளர்கள் உடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர். மோனிகா ராணா, இ.ஆ.ப, அவர்கள் தெரிவிக்கையில்:- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மொக்கத்தாண்பாறை கிராமத்தில் மலைவாழ் மக்கள் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலைகளில் தேன், கிழங்கு. மூலிகைப் பொருட்களை விற்பனை செய்வதை வாழ்வாதாரமாக கொண்டு வருகின்றனர். வாழ்வாதாரத்திற்காக குழந்தைகளும் பெற்றோருடன் செல்வதால், அவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மா.சௌ. சங்கீதா, இ.ஆ.ப. அவர்கள் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மொக்கத்தாண்பாறை கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மிகவும் அவசியம் என்றும் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தினார். அப்போது மோக்கத்தான்பாறை கிராமங் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், வீடுகள் பாழடைந்து கிடப்பதாகவும், மழைக்காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாத நிலை உள்ளது என்றும் கூறி பல்வேறு கோரிக்கைகளை மலைவாழ் மக்கள் முன்வைத்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் முதற்கட்டமாக இக்கிராமத்தில் தலா 4 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கட்டுமானப் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பயனாளிகளுக்கு இவ்வீடுகள் வழங்கப்பட உள்ளன என கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர். மோனிகா ராணா, இஆப அவர்கள் அவர்கள் செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது தெரிவித்தார்..
Next Story