சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
Thirukoilure King 24x7 |1 Sep 2024 3:07 AM GMT
வழிபாடு
கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் விஸ்வநாதர் கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தையொட்டி, நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, மாலை 5:00 மணிக்கு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற் ஜோதிநாதர், நீலமங்கலம் மற்றும் கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார் மற்றும் தென்கீரனுார் அருணாசலேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், சின்னசேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் மற்றும் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்களிலும், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர், பாசார் பிரம்மபுரீஸ்வரர், மேலப்பழங்கூர் வேதபுரீஸ்வரர், சாத்தப்புத்துார் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில்களிலும் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
Next Story