மூலனூர் பகுதியில் நீர்வழிப்பாதையில் இருந்த புற்கள், செடிகள், புதர்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
Dharapuram King 24x7 |1 Sep 2024 3:12 AM GMT
மூலனூர் பகுதியில் நீர்வழிப்பாதையில் இருந்த புற்கள், செடிகள், புதர்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
மூலனூர் பகுதியில் நீர்வழிப்பாதையில் இருந்த புற்கள், செடிகள், புதர்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டம் மூலனூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சிறிய மற்றும் நடுத்தர பாலங்கள் பராமரிப்பு நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மழைக்காலங்களிலும் மற்றும் பொதுவான நேரங்களிலும் மழைநீர் தங்கு தடை இல்லாமல் செல்வதற்காக பாலங்களை சரி செய்ய பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் தலைமைப்பொறியாளர் அவர்களின் அறிவுரைகளின்படி மூலனூர் உட்கோட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை மற்றும் மாவட்ட இதர சாலைகளில் உள்ள பெரிய, சிறிய மற்றும் நடுத்தர பாலங்களிலும் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நீர்வழிப்பாதையில் இருந்த புற்கள், செடிகள், புதர்களை அகற்றி சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. மூலனூர் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து பாலங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story