அரசுக்கு சொந்தமான பூமியை ஆக்கிரமிப்பு செய்வதாக பொதுமக்கள் ஆர்டிஓவிடம் மனு
Dharapuram King 24x7 |1 Sep 2024 3:13 AM GMT
அரசுக்கு சொந்தமான பூமியை ஆக்கிரமிப்பு செய்வதாக பொதுமக்கள் ஆர்டிஓவிடம் மனு
அரசுக்கு சொந்தமான பூமியை ஆக்கிரமிப்பு செய்வதாக பொதுமக்கள் ஆர்டிஓவிடம் மனு தாராபுரம் அருகே அரசுக்கு சொந்தாமான பூமி தான பூமியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென ஆர்.டி.ஒ அலுவலகத்தில் பொதுமக்கள்மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,குமாரபாளையம் கிராமத்தில்.திருமலைசாமி மற்றும் அவருடைய மனைவி மாரியம்மாள் பெயரில் பூமி வாங்கி அதில் விவசாயம் செய்து வருகின்றனர், அதன் அருகாமையில் தமிழ்நாடு அரசு பூமிதான பூமி 1 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அந்த பூமியில் தென்னை, மா மற்றும் பல்வேறு வகையான மரம் செடி, கொடிகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார். எனவே அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திருமலைசாமி மற்றும் அவருடைய மனைவி மாரியம்மாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று தாராபுரம் ஆர்டிஓ அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.
Next Story