விழுப்புரத்தில் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு
Villuppuram King 24x7 |1 Sep 2024 3:51 AM GMT
அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு
விழுப்புரம், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரிகளான விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, காஞ்சிபுரம், ஆரணி கல்லுாரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா, விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில் நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அண்ணா பல்கலை வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஆபிரகாம், மின் மற்றும் மின்னணு பொறியியல் புல உறுப்பினர் உஷா முன்னிலை வகித்தனர்.பல்கலை இணைவேந்தரான அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் பயின்ற 669 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:கருணாநிதி ஆட்சியில் தான் அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டது. அவரது ஆட்சியில் தான் அரசு கலைக் கல்லுாரி, பொறியியல், மருத்துவ கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டது.அவரது வழியில், முதல்வர் ஸ்டாலின், ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கண்டிப்பாக உயர்கல்வி பயில வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.நீங்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும், அதில் முதல் நபராக வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 'நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது.தமிழ்நாடு உயர்கல்வியில் 52 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. மாணவர்கள் தங்களின் எதிர்கால செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு பொன்முடி பேசினார்.
Next Story