ராமநாதபுரம் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது

ஆர் எஸ் மங்கலத்தில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி விழா கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு கிராமத்து அவர்களின் மண்டகப்படி நிகழ்வுகளாக சக்தி கரகம், தருமர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரௌபதி திருக்கல்யாணம், கோட்டை சுபத்திரை கல்யாணம். அபிமன்யு பிறப்பு, தவசு கட்டுப்பழி, படுகளம், உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.    விழாவின் தொடர்ச்சியாக பூக்குழி விழா இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது.  முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் அரசு ஊரணி குளத்து  நீரில் நீராடி அங்கிருந்து ஊர்வலமாக சென்று திரௌபதி அம்மன் கோயில் முன்பு அமைக்கபட்டிருந்த தீ குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.  தொடர்ந்து மூலவர் மற்றும் அம்மனுக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்,  விழாவின் தொடர்ச்சியாக மஞ்சள் நீராடுதல் விழா நடைபெற்றது. செப்டம்பர் 3ல் நடைபெறும் பட்டாபிஷேக விழாவுடன் இக்கோயில் விழா நிறைவு பெறுகின்றது. விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டினார் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்
Next Story