நாமக்கல்லில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்!
Namakkal King 24x7 |1 Sep 2024 4:45 AM GMT
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரக்பி விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய கிட் பேக் மற்றும் பயிற்சி கையேடுகளை நாமக்கல் மாவட்ட ரக்பி சங்கத்தின் தலைவர் "நல்லப்பா" சதிஷ்சேகர் மற்றும் நிர்வாகிகள் வழங்கினார்கள்.
நாமக்கல் மாவட்ட ரக்பி சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு ரக்பி சங்கத்தின் துணைச் செயலாளர் சாகுல் ஹமீத், ரக்பி இந்திய விளையாட்டு வீரர் சென்னையை சேர்ந்த வெங்கட், தமிழ்நாட்டை சேர்ந்த ரக்பி விளையாட்டு வீராங்கனை நிவேதிதா மற்றும் இந்திய ரக்பி நடுவர் முகேஷ் ஆகியோர் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரக்பி விளையாட்டின் முறைகளை அவர்களுக்கு பயிற்சி விளக்கம் அளித்தனர். பின்னர் அனைவருக்கும் ரக்பி விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய கிட் பேக் மற்றும் பயிற்சி கையேடுகளை நாமக்கல் மாவட்ட ரக்பி சங்கத்தின் தலைவர் '"நல்லப்பா" சதிஷ்சேகர், துணை தலைவர்கள் முல்லை வாணன், அருள் வேலன், நவலடி, பிரவீன்குமார், செயலாளர் சதிஷ்குமார்,துணைச் செயலாளர்கள் ராகுல், சபரீஷ், முகேஷ், பொருளாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினார்கள்.
Next Story