கத்தக்குறிச்சியில் மாட்டு வண்டி எல்லை பந்தயம்
Alangudi King 24x7 |1 Sep 2024 6:35 AM GMT
கத்தக்குறிச்சியில் மாட்டு வண்டி எல்லை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் அருகே உள்ள கத்தக்குறிச்சி ஊராட்சியில் சித்திவிநாயகர், அய்யனார், ராக்கம்மாள் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலய வருடாபிஷேக விழா முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயத்தில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன் சிட்டு மாடு என விடப்பட்டு பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story