பல்லடம் அருகே கூகுள் பேவில் பணம் அனுப்ப மறுத்த பிரியாணி கடை உரிமையாளர்
Palladam King 24x7 |1 Sep 2024 7:54 AM GMT
பிரியாணி கடை உரிமையாளரை கத்தியால் வெட்டிய இருவர் கைது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்.இவர் பனப்பாளையம் சோதனைச்சாவடி அருகே பிரியாணி கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் கடைக்கு வந்த இர்பான் என்பவர் இரண்டாயிரம் ரூபாய் பணம் தருவதாகவும் அதனை கூகுள் பேவில் அவரது நண்பருக்கு அனுப்பவேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஸ்டீபன் உன்னை யாரென்று தெரியாது பணம் மாற்ற முடியாது என கூறியுள்ளார்.இன்னிலையில் இன்று மது போதையில் இருந்த இர்பான் தனது நண்பர் வடிவேலு எனவருடம் மீண்டும் ஸ்டீபனின் பிரியாணி கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த மீன்கடையில் இருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்த இர்பான் ஸ்டீபனை வெட்ட சென்றுள்ளார்.அப்போது அதனை தடுக்க முயன்ற ஸ்டீபனின் கை விரல் துண்டானது.அதனை அடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.காயமடைந்தஸ்டீபனை மீட்ட அருகில் இருந்தவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனை அடுத்து பல்லடம் காவல் நிலையத்தில் ஸ்டீபன் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பச்சாபாளையம் அருகே மறைந்திருந்த இர்பான் மற்றும் வடிவேலுவை கைது செய்தனர்.கூகுள் பேவில் பணம் அனுப்ப மறுத்த பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story