சிவகங்கை மாட்டுவண்டி நடத்தியவர்கள் வழக்கு

X
திருப்புத்தூர் அருகே ஆவிணிப்பட்டி- கீழச்சிவல்பட்டி சாலையில் நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர். இந்த மாட்டு வண்டி பந்தயத்தை அரசு அனுமதியின்றி நடைபெற்றதாக விஏஓ கொடுத்த புகாரின் பெயரில் கீழச்சுவல்பட்டி போலீசார் ஆவிணிப்பட்டியைச் சேர்ந்த அழகுசுந்தரம், சுப்பையா, ஆறுமுகம், வெள்ளைச்சாமி, தேனப்பன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

