பரமத்தி ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்.

X
Paramathi Velur King 24x7 |1 Sept 2024 2:56 PM ISTபரமத்தி ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,ஆக.1: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பரமத்தி ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராசு தலைமை வகித்தார். சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் உறுப்பினர்களிடையே வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு களப்புணி ஆட்டம் வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். மேலும் கட்சி நிர்வாகிகளிடம் அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டு அறிந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக ஒன்றியம்,பேரூர்,இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
