கண்ணமங்கலம் அரசு முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்

ஆரணி செப்.1: கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்(முஸ்லீம்) பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்(முஸ்லீம்) பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாவை தலைமை தாங்கினார். கவுன்சிலர் நஸ்ரின் பானு, நூர்மா, கல்வியாளர்கள் அல்லாபகஷ், இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் மல்லிகா வரவேற்றார். கூட்டத்திற்கு பேரூராட்சி துணைத்தலைவர் வி.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதியதாக தேர்வு செய்யப்பட்ட எஸ்எம்சி தலைவர் நேஹாகவுசர், துணைத்தலைவர் நஸ்ரின் பானு மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்து ெதரிவித்தார். மாணவ மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி மற்றும் ஒழுக்கத்தை பயிற்றுவிப்பதாக தலைமையாசிரிையை மல்லிகா மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார். தொடர்ந்து உதவி ஆசிரியை ஷர்மிளா ஆர்த்தி படிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் ஆசிரியர் சையத் முத்திஸ்ஸீர் அகமது நன்றி கூறினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் கவசர் பர்வீன், பிரபு, நூர் முபாரக் பாஷா மற்றும் எஸ்எம்சி உறுப்பினர்கள் கலந்து ெகாண்டனர்.
Next Story