போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி
Virudhachalam King 24x7 |1 Sep 2024 9:47 AM GMT
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடந்தது
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்து வருவதால், மாணவ- மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் அதிகமான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி இளம் வயதிலேயே வாழ்க்கை சீரழிந்துப் போய் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளதாக கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில், போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டத் தலைவர் முஹம்மது யாசீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், மாவட்ட பொருளாளர் அப்துல் காதர், மாவட்ட துணைத் தலைவர் யாசர் அராபத், மாவட்ட துணைச் செயலாளர் உபைத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தார். முன்னதாக, கிளை தலைவர் முஹம்மது அலி வரவேற்றார். பேரணியானது, மங்கலம்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சுமைதாங்கியை அடுத்துள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சென்றது. இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் பெரோஸ்கான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில், கிளை பொருளாளர் முஹம்மது இஸ்மாயில், துணை தலைவர் அமீர், துணை செயலாளர் அப்துல் ரஜாக் உட்பட பெண்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முடிவில், மங்கலம்பேட்டை பேரூர் செயலாளர் சர்புதீன் நன்றி கூறினார்.
Next Story