அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம் எல் ஏ
Thiruporur King 24x7 |1 Sep 2024 10:33 AM GMT
திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் கிராமத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம் எல் ஏ பாலாஜி நன்றி தெரிவித்த விவசாயிகள்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவரும், திருக்கழுக்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவருமான கரியச்சேரி சேகர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக திருப்போரூர் எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி திருக்கழுக்குன்றம் சேர்மேன் ஆர் டி அரசு முன்னாள் எம்எல்ஏவும் ஒன்றிய செயலருமான வீ தமிழ்மணி ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர் செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில் 12 ஆயிரத்து 703 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் இன்றைய தினம் நத்தம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஆர் கே ரமேஷ் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் அரசு அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story