அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை

X
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இந்நாள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா. செயலாளர் வழக்கறிஞர் பாலச்சந்தர் தலைமையில், துணைத் தலைவர் பூக்கடை ராஜசேகர் தனது சொந்த செலவில் 9 ஆம் வகுப்பில் 48 மாணவர்களுக்கும், 11ஆம் வகுப்பில் 105 மாணவர்களுக்கும், மொத்தம் ரூபாய் 1,25,000 மதிப்பில் சீருடை வழங்கினார். அனைவருக்கும் இனிப்பு , காரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிர்வாகிகள் ரங்கராஜ், சோமு, இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வினோத் குமார் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், விஜயலட்சுமி நன்றி கூறினார். ஆசிரியர்கள் தனபால், பிரகாசம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

