புதுகையில் குளம் போல் காட்சி அளிக்கும் சாலை

X
புதுகை திருவப்பூர் வருமான வரி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் சற்று முன் பெய்த மழையின் காரணமாக குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை பெய்த உடனே தண்ணீர் போக முடியாமல் வடிகால் வாரியில் குப்பைகள் அதிகமாக இருப்பதால் தண்ணீர் தேங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Next Story

