அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் முகாம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரை
கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் அதிமுக குளித்தலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அட்டை வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட கழக செயலாளருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரை வழங்கினார். இதில் குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், குளித்தலை நகர செயலாளர் மணிகண்டன், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story