நடிகர் விஜய்யுடன் கூட்டணி? ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்
Thoothukudi King 24x7 |1 Sep 2024 1:29 PM GMT
தூத்துக்குடி; சன்டாளன் என்று கூறியதற்கு கைது செய்தால் ஜாலிதான் சென்னையில் நடத்தப்படும் ஃபார்முலா போர் கார்பந்தயம் தேவையற்றது தமிழகத்தில் பாலியல் தொந்தரவுகள் அதிகமாவதற்கு காரணம் போதைப் பொருட்கள் நடமாட்டம் தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி
தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் என்னை சமாளிக்க முடியவில்லை ஏதாவது வழக்கு போட வேண்டும் என்று போட்டுள்ளனர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் சன்டாளன் என்ற வார்த்தையில் ஏதாவது ஜாதி பெயர் உள்ளதா ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறதா சண்டாளன் என்ற வார்த்தை எல்லா பகுதிகளிலும் உள்ளது ஊரை கொள்ளை அடித்து உலையில் போடுபவனை திருடனை சண்டாளன் என்று கூறுவார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது இதற்காககைது செய்தால் ஜாலிதான் பார்முலா 4 கார் பந்தயம், மேல் தட்டு மக்களின் விளையாட்டு, கொளுத்த பண திமிரு விளையாட்டு. யார்? என்னை கேட்பது, யார்? என்னை தடுப்பது என்ற பதவி பண திமிரில் விளையாடு நடத்தப்படுகிறது இன்னும் இரண்டு ஆண்டு தான் (ஆட்சி) அதற்கு பிறகு ? இந்த போட்டி நடத்துவதற்கு சாலையை சீரமைக்கலாம், கல்விக்கூடங்களை சீரமைக்கலாம், ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை .பந்தயம் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது. இந்த கார் பந்தயத்தில் ஏதாவது தமிழர்கள் இருக்கிறார்களா இந்த காரை பார்த்திருப்பார்களா அந்தப் பகுதியில் இரண்டு அரசு மருத்துவமனைகள் உள்ளன இந்த பந்தயத்தை அனைவரும் வெளியே நடத்த வேண்டும் என்று கூறினார்கள் ஆனால் கேட்காமல் இங்கே நடத்துகிறார்கள் டோல் கேட் கட்டண உயர்வு. கொடுக்க வேண்டாம். இறங்கி வாகனத்தை நிறுத்தி போராட்டம் செய்யுங்கள் நாங்கள் வருகிறோம் தமிழக முதல்வர் அமெரிக்க பயணம் குறித்து கருத்து தெரிவித்த அவர், முதல்வர் முன்பு பல நாடுகளை பார்த்திருக்கிறார். இந்த நாட்டை பார்த்திருக்க மாட்டார். இதுவரை நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு 31,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சொல்வார்கள் . இது உண்மையா? போதையின் காரணமாகத்தான் பாலியல் ரீதியான தொந்தரவுகள் தற்போது அதிகரித்து வருகிறது போதைப் பொருட்களான அபின் ஹெராயின் பெத்த மட்டமையின் உள்ளிட்ட பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது அதை தடுக்க வேண்டும் தமிழக வெற்றிக் கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு நாங்கள் தனித்து போட்டியிட உள்ளோம் 2026 ல் 234 தொகுதியிலும் (தமிழர் கட்சி) தனித்து போட்டியிடுகிறது. தற்போது 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்து விட்டேன். விரைவில் அறிவிப்போம் நீங்கள் யாராவது வந்தாலும் வேட்பாளராக அறிவிக்கிறோம்.
Next Story