வடிவேல் நகரில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்த வாலிபர்.

வடிவேல் நகரில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்த வாலிபர்.
வடிவேல் நகரில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்த வாலிபர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டிபாளையம், கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். வயது 50 . இவர் சாய் கேட்டரிங் சர்வீஸ் என்ற பெயரில், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பெயரில் உணவு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஆனால் விஜய் ஆனந்த் எதிர்பார்த்த அளவுக்கு நிறுவனம் லாபம் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்தது. இதனால், விரத்தி அடைந்த மனதோடு வாழ்ந்து வந்த விஜய் ஆனந்த் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் சல்பாஸ் விஷ மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மனைவி ஸ்ரீதேவி தனது கணவரை மீட்டு, கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 31 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீதேவி அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த விஜய் ஆனந்தன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story