பங்களா நகரில் போதைப் பொருட்கள் விற்பனை. ஒருவர் கைது.

பங்களா நகரில் போதைப் பொருட்கள் விற்பனை. ஒருவர் கைது.
பங்களா நகரில் போதைப் பொருட்கள் விற்பனை. ஒருவர் கைது. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஆகஸ்டு 31ஆம் தேதி மாலை 6 மணி அளவில், காவல் உதவி ஆய்வாளர் சண்முகானந்தா வடிவேல்,நொய்யல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். நொய்யல் குறுக்கு சாலை அருகே உள்ள பங்களா நகர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் குழந்தைசாமி என்பவர், அவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் விமல் பாக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை செய்வதற்காக கடையில் பதுக்கி வைத்திருந்த ஐந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளையும், 10-விமல்பாக்கு பாக்கெட்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்ட குழந்தைசாமி மீது வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story