பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம்
Dindigul King 24x7 |1 Sep 2024 3:08 PM GMT
திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் பூரண மதுவிலக்கு கோரி பூஜாரிகள் பேரமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில இணை செயலாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சந்தோஷ் குமார் வரவேற்று பேசினார். செய்தி தொடர்பு செயலாளர் குமார் கூட்ட முடிவில் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது பெருக வரும் குற்றங்களுக்கு மதுவே பெரிய காரணமாக உள்ளது. எனவே தமிழகத்தில் மதுவை ஒழித்து பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்றும், வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்வது என்றும், நலிவடைந்த கோயில்களுக்கும், வீடுகளுக்கு வழங்கும் இலவச 100 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும். அதேபோல் நலவாரியத்தில் நலவாரிய அட்டை, ஓய்வூதியம் ஆகியவற்றை நிலுவையில் வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் துணைத் தலைவர் சரவணகுமார், மாநகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பூஜாரிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story