மூலனூர் ஒன்றிய பகுதியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

மூலனூர் ஒன்றிய பகுதியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது
மூலனூர் ஒன்றிய பகுதியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது
மூலனூர் ஒன்றிய பகுதியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மேற்கு ஒன்றிய திமுக மற்றும் கன்னிவாடி பேரூர் கழக திமுக, மூலனூர் பேரூர் கழக திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நேற்று மூலனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் வரவேற்புரை ஆற்றினர். திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மாநகராட்சி 4 வது மண்டல குழு தலைவருன இல. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், நம்மளுடைய முதல்வர் மூன்றாண்டு கால சிறப்பான ஆட்சியை நடத்தி தற்போது நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தொழில்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வழங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் 40க்கு 40 நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது வரவேற்பு கூறியது என கூறினார். இதேபோல் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவர் நம்மளுடைய முதல்வர் இதனால் தான் அரசு மூலமாக பல்வேறு திட்டங்கள் நம்மளுக்கு கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில விளையாட்டு மேம்பாட்டு துணை செயலாளர் கார்த்திக், மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூர் கழக செயலாளர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், கன்னிவாடி பேரூராட்சி தலைவர் ரேவதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் இந்நாள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story