தாராபுரம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது
Dharapuram King 24x7 |1 Sep 2024 3:22 PM GMT
தாராபுரம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது
தாராபுரம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நேற்று தாராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாராபுரம் திமுக நகர கழகச் செயலாளர் சு.முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினர். திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மாநகராட்சி 4 வது மண்டல குழு தலைவருன இல. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாராபுரம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி பேசுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றி பெற்றது அவ்வளவு எளிதல்ல இருப்பினும் திமுக தொண்டர்களின் கடுமையான முயற்சியின் காரணமாக நாடாளுமன்றத் தொகுதியில் 40 தொகுதிகளையும் திமுக வென்றது என தெரிவித்தார்.. இதைத் தொடர்ந்து செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சுவாமிநாதன் கூறுகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கயல்விழி செல்வராஜ் இருப்பினும் தாராபுரம் நகர திமுக கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தாராபுரம் நகரத்தில் மட்டும் பெற்று நாம் வெற்றி பெற்றோம். இதைத்தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் சிறப்பாக உழைத்து வெற்றி பெற நிர்வாகிகள் உழைக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் நகர திமுக துணைச் செயலாளர் கமலக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாவதி, சரஸ்வதி, வார்டு உறுப்பினர்கள் ஹைடெக் அன்பழகன் ஸ்ரீதர் பலரும் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் இந்நாள் திமுக நகர நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் இறுதியாக நகர திமுக அவைத்தலைவர் கதிரவன் நன்றியுரை ஆற்றினார்.
Next Story