ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு
Dindigul King 24x7 |1 Sep 2024 3:34 PM GMT
நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா முன்பு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா முன்பு ஆய்வாளர் தங்கமுனியசாமி, சார்பு ஆய்வாளர் தர்மர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இதைப் பார்த்த போலீசார் அவர்களை அழைத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றால் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.
Next Story