பைக் மீது பஸ் மோதி விபத்து
Virudhachalam King 24x7 |1 Sep 2024 5:44 PM GMT
கொத்தனார் சாவு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கீழவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோவிந்தராஜ் (35). இவர் விருத்தாசலம் பகுதியில் தங்கிக் கொண்டு கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்காக தனது பைக்கில் விருத்தாசலத்தில் இருந்து மணவாளநல்லூர் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மணலூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மு.பரூர் பகுதியிலிருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story