கருவேப்பிலங்குறிச்சி அருகே குப்பை போடுவதில் தகராறு
Virudhachalam King 24x7 |1 Sep 2024 5:46 PM GMT
ஒரு பெண்ணை தாக்கிய இரண்டு பெண்கள் கைது
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தீவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியநாராயணன் மனைவி சுந்தரி(35). இவருக்கும் அதே பகுதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜோதி மனைவி செல்லம்மாள்(50) என்பவருக்கும் குப்பை போடுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29 ந் தேதி அன்று சுந்தரி தனது வீட்டு வாசலில் இருந்த குப்பைகளை சேகரித்து ரோட்டின் ஓரமாக வைத்திருந்துள்ளார். இதனை செல்லம்மாள் மற்றும் கருப்பையின் மனைவி செல்வநாயகி (30) என்பவரும் சேர்ந்து ரோடு உங்கள் வீட்டு அப்பன் சொத்தா, இங்கு ஏன் குப்பையை சேர்த்து வைத்துள்ளாய் என கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து சுந்தரியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சுந்தரி கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிவபெருமான் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லம்மாள் மற்றும் செல்வநாயகி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story