விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை
Thirukoilure King 24x7 |1 Sep 2024 7:41 PM GMT
கோரிக்கை
விநாயகர் சதுர்த்தி வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் விநாயகர் சிலை விற்பனை, சிலை நிறுவுதல், வழிபடுதல் மற்றும் சிலைகள் கரைத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு டி.எஸ்.பி., தேவராஜ் தலைமை தாங்கி விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். அதில் விநாயகர் சிலைகள் உரிய அனுமதி பெற்று நிறுவ வேண்டும். புதிய இடங்களில் விநாயகர் சிலை நிறுவ அனுமதி கிடையாது. சிலைகள் அடிதளம் உட்பட 10 அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும். மேலும், சிலை நிறுவுதலுக்கான பாதுகாப்பு குழுவில் ஒரு காவலர் மற்றும் 2 தன்னார்வலர்கள் இருக்க வேண்டும். நிறுவப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சி.சி.டி.வி., காமிராக்கள் பொருத்தப்படவேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட சிலைகள் நிறுவக்கூடாது. சர்ச்சைக்குரிய இடங்களில் சிலைகள் நிறுவப்படுவதற்கு அனுமதி கிடையாது. கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளுக்கு அனுமதி கிடையாது. விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடங்களிலும், ஊர்வலத்தின் போதும் பட்டாசுகள் வெடிக்க கூடாது.
Next Story