திருச்செங்கோட்டில் ஆணழகன் போட்டி
Tiruchengode King 24x7 |2 Sep 2024 1:31 AM GMT
திருச்செங்கோட்டில் ஆணழகன் போட்டி
திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாநில அளவிலான ஆணழகன்போட்டிகள் நடைபெற்றது. இதில் வயது மற்றும் எடை பிரிவுகள் என பிரிக்கப்பட்டு பல்வேறு வகையான பிரிவுகளில் ஆணழகன் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் கலந்து கொண்டவர்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு முதல் இடம் பிடித்தவருக்கு 5000 ரூபாய் ரொக்கபரிசு தங்க நிறத்திலான ஆணழகன் சிலை சிலை சான்றிதழ் வழங்கப்பட்டது இரண்டாம் இடம் பிடித்தவருக்கு3000 ரூபாய் ரொக்க பரிசு வெள்ளிநிறத்திலான ஆணழகன் சிலை சான்று வழங்கப்பட்டது மூன்றாம் இடம் பிடித்தவருக்கு செம்பு நிற ஆணழகன் சிலை 2000 ரொக்க பரிசு சான்று வழங்கப்பட்டது செம்பு நிற ஆணழகன் சிலை 2000 ரொக்க பரிசு சான்று வழங்கப்பட்டது. நாலாம் மற்றும் ஐந்தாம் இடம் பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஆணழகன் சிலை ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு ஆணழகன் போட்டிக்கான பயிற்சியாளர் ஆசியன் சாம்பியன் பட்டம் வென்ற ஆணழகன் மற்றும் உலக ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர் 2019 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா அவார்டு பெற்ற பாஸ்கரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.பரிசுகளை வழங்கிப் பேசிய பாஸ்கரன் கூறியதாவது சாதாரண இடத்திலிருந்து வெறும் பத்தாவது மட்டுமே படித்த நான் இன்றைக்கு ரயில்வேயில் ஒரு நல்ல வேலையில் இருக்க நான் விளையாட்டுத்துறையில் தேர்ந்தெடுத்த இந்த ஆணழகன் போட்டி தான் காரணம் தொடர்ந்து விடாமுயற்சியுடன் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் கடின உழைப்புடன் பாடுபடும் யாரும் இந்த உயரத்தை எட்ட முடியும் என கூறினார்.நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்மோகன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக ஆலோசகர் பாலுசாமி டி ஏ பி பி ஏதலைவர் மாஸ்டர் மிஸ்டர் ஓல்ட் சாம்பியன் அரசு, மிஸ்டர் இந்தியாடி ஏ பி பி ஏ பொதுச் செயலாளர் பாலமுருகன் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் விளையாட்டு துறை இயக்குனர் முத்து கண்ணன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story