ஆண்டிபட்டி அருகே தொழிலாளர்களை தாக்கிய மூன்று நபர்கள் கைது
Andippatti King 24x7 |2 Sep 2024 2:14 AM GMT
நாகலட்சுமி கொடுத்த புகாரில் அடிப்படையில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து மயில்வேல், அமுல்ராஜ், சூர்யா ஆகிய மூவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ராஜதானியில் செங்கல் காளவாசல் தொழிலாளர்களை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.கம்பம் சுருளிப்பட்டியை சேர்ந்தவர் நாகலட்சுமி 35. இவர் ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் காளவாசலில் கூலி வேலை செய்து வருகிறார். இரு நாட்களுக்கு முன் இவரது மகன் பால்பாண்டி குடிநீர் வாங்குவதற்காக தெப்பம்பட்டி சென்றுள்ளார். அப்போது தெப்பம்பட்டியை சேர்ந்த மயில்வேல் 38, அமுல்ராஜ் 23, சூர்யா 23, அஜித்குமார் 26, ஆகியோர் பால்பாண்டியுடன் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து தட்டி கேட்டபோது இன்னும் சிலரை வரவழைத்து பால்பாண்டி அவருடன் வேலை பார்த்தவர்களையும் செங்கற்களால் எறிந்து தாக்கியுள்ளனர். இதில் நாகலட்சுமி அவர்களது கணவர் பாண்டி, மகன் பால்பாண்டி, அவருடன் வேலை பார்க்கும் ஜீவா ஆகியோர் காயம் அடைந்தனர். நாகலட்சுமி புகாரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து மயில்வேல், அமுல்ராஜ், சூர்யா ஆகிய மூவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Next Story