மின்சாதனங்கள் திருட்டு விவசாயிகள் அதிர்ச்சி!

மின்சாதனங்கள் திருட்டு விவசாயிகள் அதிர்ச்சி!
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் ஆதனக்கோட்டை அருகே வளவம் பட்டி கிராமத்தில் விவசாய பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியை சேதப்படுத்தி அதில் இருந்த காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி அருகே அமைந் துள்ள துணைக்கோள் நகரத்தில் இருந்த 2 மின்மாற்றியை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த வயர் மற்றும் மின்சாதன பொருட்களை திருடிசென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு களபம் கிரா மத்தில் வயல்வெளியில் இருந்த மின்மாற்றியை உடைத்து காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது. மாவட்டத்தில் தொட ரும் இந்த மின்சாதனங்கள் திருட்டு மின்வாரிய வட்டாரம் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. மின்மாற்றியை உடைத்து காப்பர் கம்பிகளை திருடி செல்வதால், புதிய மின்மாற்றி அமைக்க சில நாட்கள் ஆகிறது. இதனால் அந்த பகுதியில் மின் வினியோகம் தடைப் பட்டு விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள் ளாகின்றனர். மின்மாற்றி திருட்டை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story