குளித்தலையில் ஏடிஎம் அறையில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பால் பரபரப்பு

லாவகமாக பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே உள்ள India one ATM இயந்திரம் உள்ளது. அங்குள்ள அறையில் இன்று திடீரென கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்ததால் அங்கிருந்தவர்கள் பதறி வெளியே ஓடி உள்ளனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏடிஎம் அறையில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் போட்டனர். பிறகு அந்த பாம்பை வனத்துறை அலுவலர் சிவரஞ்சனி பெற்றுக்கொண்டு காட்டில் விடுவதற்கு கொண்டு சென்றார். ஏடிஎம் அறையில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
Next Story