திருப்பூரில் நீர்நிலைக் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்தை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருப்பூரில் நீர்நிலைக் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்தை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
திருப்பூரில் நீர்நிலைக் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்தை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
நீர்நிலைக் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்தை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் பிரதான சாலையில் வேலம்பட்டி எனும் பகுதியில் சுங்கச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதிகள் திருப்பூர் மாநகராட்சி முக்கிய பகுதி வழியாக வரும் நிலையில் அவற்றையும் கணக்கில் எடுத்து முறைகேடாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் வேலம்பட்டி நீர்நிலைக் குட்டையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் மையம் கட்டப்பட்டு உள்ளதாகவும் இதனை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் இணைந்து கோரிக்கை விடுத்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி வேலம்பட்டி குட்டையில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்ற தெற்கு வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில் தற்பொழுது வரை சுங்கச்சாவடி கட்டிடம் அகற்றப்படாமல் இருப்பதாகவும் மழைக்காலம் நெருங்கி வருவதால் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கூறி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Next Story