தன்னுடைய சொத்தை அபகரித்த நபரிடமிருந்து சொத்தை மீட்டு அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் மனு!

தன்னுடைய சொத்தை அபகரித்த நபரிடமிருந்து சொத்தை மீட்டு அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் மனு!
தன்னுடைய சொத்தை அபகரித்த நபரிடமிருந்து சொத்தை மீட்டு அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் ஒருவர் மனு அளிக்க வந்தார்.
தன்னுடைய சொத்தை அபகரித்த நபரிடம் இருந்து,  சொத்தை மீட்டு அரசே எடுத்துக்கொள்ள  வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  முதியோர் ஒருவர் உருக்கமாக மனு அளிக்க  வந்தார் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  பகுதியை சேர்ந்தவர் கணேசன், 85 வயது முதியவரான இவரது பெற்றோர்கள் வசித்து வந்த இடம் மட்டும் வீட்டை முருகேசன் என்பவர் அபகரித்து விட்டதாகவும், இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் அளித்த  மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கும் கணேசன்,  இறுதி காலத்தில் தனது உடலை அரசு மருத்துவமனைக்கு உடல் தானம் செய்துள்ள நிலையில் , அந்த சொத்தை அரசே ஏற்றுக் கொண்டு ஏழை எளிய மாணவர்களுக்கு உதவ வேண்டும் எனவும், இந்நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும்  உருக்கமாக தெரிவித்தார்
Next Story