காங்கயத்தில் ஏழு வீடுகளில் முகமூடி அணிந்து கொள்ளை பொதுமக்கள் லட்சம்
Kangeyam King 24x7 |2 Sep 2024 11:29 AM GMT
காங்கேயத்தில் 7 க்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை - கொள்ளையில் ஈடுபட்ட 6 மேற்பட்ட நபர்கள் முகமுடி அணிந்துவந்தாக பொதுமக்கள் அச்சம் . காவல்துறை தீவிர விசாரணை
காங்கேயம் தாராபுரம் சாலையில் கண்ணன் 54 ஸ்தபதி கோவில் திருப்பணிகள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் வீடு காங்கேயம் பாரதியார் நகரில் உள்ளது நேற்று இவர் திருமணத்திற்கு சென்ற நிலையில் அதிகாலை நேரத்தில் முகமூடி அணிந்து கொண்டு 6 கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு,பட்டுப்புடவை போன்றவற்றை கொள்ளை போனது . இதே போல் திவ்யா (36) சக்திநகர் வசித்தது வருகின்றார் இவர் பள்ளிக்கு கட்டவேண்டிய ரூ.1லட்சம் மற்றும் 1 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதே போல் பாரதியார் நகரில் சாலமன்,செல்வி ஆகியோர் வீடுகளிலும் சக்தி நகரில் நாட்ராயன் , பிரபாவதி, திருநாவுக்கரசு ஆகியோர் வீடுகளிலும் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது.இவர்கள் வெளியூர் சென்றுள்ளதால் கொள்ளை போனதின் மதிப்பு தெரியவில்லை அவர்கள் அனைவரும் காங்கேயம் வந்தவுடன் தான் கொள்ளையின் மதிப்பு தெரிய வரும். கொள்ளை நடைபெற்றது குறித்து இரவே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இரண்டு காவலர்கள் நேரில் வரவே கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கொண்டு கடப்பாரையை காவலர்களை நோக்கி வீசி தப்பியோடியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 3க்கும் மேற்பட்ட பேக்குகளை சக்தி நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு மறைத்து வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் காங்கேயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story