உடுமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேக்கம்
Udumalaipettai King 24x7 |2 Sep 2024 11:49 AM GMT
வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை தங்கம்மாள் ஓடை பகுதியில் இருந்து ராகல்பாவி ஊராட்சிக்கு உட்பட்ட இணைப்புச் சாலை உள்ளது வடபூதனம் -வாளவாடி பிரதான சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது இணைப்பு சாலையான ராகல்பாவி சுண்டக்காம்பாளையம் வட பூதனம் ஊராட்சி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை பகுதியில் தற்போது மழை நீர் தேங்கி வருவது வாடிக்கையாக உள்ளது இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர் எனவே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்
Next Story