டி.வி புத்தூர் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை
Virudhachalam King 24x7 |2 Sep 2024 11:53 AM GMT
அமைச்சர் சிவி கணேசன் அடிக்கல் நாட்டினார்
விருத்தாசலம் அடுத்த டிவி புத்தூர் கிராமத்தில் ரூ.28 லட்சத்தி 10 ஆயிரம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் ஆட்சியர் சரண்யா தலைமை தாங்கினார். விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத், தனி தாசில்தார் வெற்றிவேல், ஒன்றிய குழு தலைவர் மலர், ஒன்றிய குழு துணைத் தலைவர் பூங்கோதை, திமுக ஒன்றிய செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி பழனிவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் சி வி கணேசன் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். மேலும் 17.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், மோகனாம்பாள், திமுக நிர்வாகிகள் பேரலையூர் ராஜேந்திரன், அசோகன், கருப்புசாமி, சுரேஷ், விசிக சத்தியவாடி பாஸ்கர், ஊராட்சி துணை தலைவர் இளையராஜா, ஊராட்சி செயலர் பிரகாஷ், மக்கள் நலப் பணியாளர் குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதே போல வண்ணங்குடிகாடு கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை அமைச்சர் சி. வி.கணேசன் திறந்து வைத்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி வேல்முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story