பழங்குடியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவி கொடுக்கப்பட்டது
Dindigul King 24x7 |2 Sep 2024 12:16 PM GMT
பாரதி அண்ணா நகர் கிராமத்தில் சர்வதேச உரிமை கழகம் சார்பாக பழங்குடியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவி கொடுக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாயத்தின் முதல் நிலை கிராமங்களான வில்பட்டியில் அமைந்துள்ளது இதில் பல கிராமங்களில் மலை வாழ் மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றன. சர்வதேச உரிமைக் கழகத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் பொறியாளர்கள் உள்ளனர் இவர்கள் தமிழகம் முழுவதும் மலைவால் மக்களை தேடி சென்று அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றன . இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள பாரதி அண்ணா நகர் கிராமத்தில் முகாமிட்ட குழு அங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு அவசர காலங்களில் மருத்துவமனை செல்பவருக்கு bolero ஜீப் இலவசமாக வழங்கப்பட்டது மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி பல சரக்கு மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகப் பை வழங்கப்பட்டது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையிள் உள்ள பிழைகளை நீக்கி தருவதற்கு மற்றும் நபர்களை சேர்த்து அதற்கு இ சேவை மையத்தில் உள்ள அலுவலகங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக வந்து சர்வதேச உரிமைக் கழகத்தின் மூலமாக பாரதி அண்ணா நகர் மலைவாழ் மக்களுக்கு உதவிகளை புரிந்தனர்.
Next Story