ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ரயில் மோதி ஆண் பலி
Maduranthakam King 24x7 |2 Sep 2024 12:19 PM GMT
மதுராந்தகம் சாய்ராம் நகர் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ரயில் மோதி ஆண் பலி சடலம் மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சாய்ராம் நகர் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு 50 வயதுமிக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக மதுராந்தகம் போலீசார் தெரிவிக்கப்பட்டது..சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் செங்கல்பட்டு ரயில்வே போலீசருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து பிரேதத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்..பிரேதம் தலை துண்டாகி அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால் ரயில்வே போலீசார் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. எந்த ரயில் மோதி இறந்தார் என்றும் தெரியவில்லை.. இது குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story