ராமநாதபுரம் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
Ramanathapuram King 24x7 |2 Sep 2024 12:21 PM GMT
திருவாடானை அருகே தீண்டாமையின் காரணமாக குடிநீர் வழங்க மறுப்பதாக கூறி ஐம்பதற்கும் மேற்பட்ட திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள என்.மங்கலம் பட்டியல் இன மக்கள் குடியிருப்பு பகுதிக்கு கடந்த பல மாதங்களாக குடி நீர் வழங்காமல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகின்றனர். என மங்கலம் ஊராட்சி தலைவர் தமிழ்செல்விகண்ணன் என்பவர் வேண்டு மென்றே தண்ணீர் வழங்காமல் புறக்கணித்து வருவதாகவும் கூறுகிறனர். மேலும் தண்ணீர் வழங்க மறுப்பது தீண்டாமை தான் காரணம் என்றும் கூறுகின்றனர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் குளித்து செல்ல கூட முடியாத அவல நிலையில் இருப்பதால் பள்ளி குழந்தைகளுடனும், கை குழந்தையுடனும் ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் திருவாடனை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாடானை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் திருவாடனை தாசில்தார் திருவாடனை காவல் ஆய்வாளர் மற்றும் திருவாளர் அணை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் கலைந்து சென்றனர்
Next Story