புன்னம்சத்திரம் அருகே டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

புன்னம்சத்திரம் அருகே டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
புன்னம்சத்திரம் அருகே டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே விஜயநகரம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் வயது 46. இவர் தெற்கு ரயில்வேயில் ட்ராக் மேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு 8:30- மணி அளவில், கரூர் - ஈரோடு சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் புன்னம்சத்திரம் எம்ஜிஆர் ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, காட்டு வலசு, சாலப்பாளையம், குடி தெருவை சேர்ந்த முருகன் மகன் ராகுல் வயது 22 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், அர்ஜுனன் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அர்ஜுனன் வாகனத்துடன் கீழே விழுந்ததில் அவருக்கு வலது கால் மற்றும் வலது கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள எல் கே எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அர்ஜுனன் அளித்த புகார் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராகுல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story