பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதி கோயில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை.

பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதி கோயில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கோயில்களில் ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,செப்.2: பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுற்றுவட்டார கோயில்களான நன்செய்இடையாறு மகா மாரியம்மன்,கபிலர்மலை பாலசுப்ரமணியர் சுவாமி,ஜேடர்பாளையம் பச்சியம்மன்,முனியப்பன் கோயில்,காந்திநகர் திருப்பதி முனியப்பன்,கொந்தளம் மாரியம்மன்,பரமத்தி அங்காளபரமேஸ்வரி,பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயில்,மாசானி அம்மன்,அங்காளபரமேஸ்வரி,வேலூர் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாரதை நடைபெற்றது. ஆடி அமாவாசை என்பதால் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தங்க கவசத்தில் காட்சியளித்த நன்செய் இடையாறு மகா மாரியம்மன்.
Next Story