திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற சம்பவம் குறித்து ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற சம்பவம் குறித்து ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆந்திரா காவல் துறையினருடன் குற்ற சம்பவம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அண்டை மாநிலமான ஆந்திர மாநில காவல்துறையினருடன் குற்றங்கள் தடுப்பதை பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அண்டை மாநிலமான ஆந்திர மாநில காவல்துறையினருடன் குற்றங்கள் தடுப்பதை பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த ஆய்வு கூட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், உள்ளிட்ட தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் சாராயம், போதை பொருட்கள் கடத்தல் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது இதை தடுக்கும் வகையில் ஆந்திரா மாநில காவல்துறையினர் உடன் குற்ற சம்பவம் தடுப்பதை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் மனோன்மணியம், வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பேபி, நாட்றம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி, திம்மாம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் ஆந்திர மாநில காவல்துறையினர் கலந்தகொண்டனர்.
Next Story