கிராவல் மண் எடுப்பதற்கு அனுமதி கோரி ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மனு
Perambalur King 24x7 |2 Sep 2024 1:33 PM GMT
லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கிராவல் மண் எடுப்பதற்கு அனுமதி கோரி, பெரம்பலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்...... பெரம்பலூர் மாவட்ட, லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், நூற்றுக்கு மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர், இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவித்த போது, பெரம்பலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பில், ஏறத்தாழ 2500 லாரி வாகனங்கள் உள்ளது. லாரி தொழிலை நம்பி சுமார் 5000 குடும்பங்கள் உள்ளன. தனி நபர் இல்ல வீடு கட்டும் பணிகளுக்கோ அல்லது தனியார் மற்றும் அரசு சார்ந்த கட்டுமான பணிகளுக்கோ கிராவல் மண் முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் கிராவல் மண் எடுக்க உரிய அனுமதியை புவியியல் மற்றும் சுரங்கத்துறை வழங்குவதில்லை. இதனால் அனைத்து கட்டுமான பணிகளும் பாதிக்கப்படுவதோடு, இதனை நம்பியிருக்கும் 5000 குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இழந்து அன்றாட பிழைப்பிற்கே அவதிப்பட்டு வருவதாகவும், எனவே கிராவல் மன் எடுக்க அனுமதியை வழங்க வேண்டி பலமுறை மனு அளித்தும் இதுவரையில் சரியான பதிலை வழங்கவில்லை. எனவே கிராவல் மண் எடுப்பதற்கான அனுமதியை சட்டப்படி வழங்க, அனுமதியை மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிடக்கோரியும்,ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து, குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ளதாகவும், மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் உடனடியாக புவியியல், சுரங்கத்துறை அதிகாரிகளை அழைத்து சட்ட விதிமுறைப்படி அவர்களுக்கு மண் எடுக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்.
Next Story