கணினி பயன்பாட்டியல் துறை கருத்தரங்கம்

கணினி பயன்பாட்டியல் துறை கருத்தரங்கம்
கணினி பயன்பாட்டியல் துறை கருத்தரங்கம்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறை மற்றும் நிறுவன புதுமை குழு சார்பாக symposium (Spark 2024) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இக்கல்லூரியின் செயலரும் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையருமாகிய மு.இரமணிகாந்தன் தலைமை வகித்தார்.விழாவை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள் தொடங்கி வகித்தனர். முதல்வர் முனைவர்.கி. வெங்கடாசலம் கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர் செ.பிரேமா வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் Paper Presentation,Debugging,Quiz,Image Connectivity போன்ற தொழில்நுட்ப மற்றும் ADZAP,Photography,Dance,MIME, தொழில்நுட்பம் சாராத போட்டிகள் நடைபெற்றது. சேலம், பெரியார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட இக்கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறை நடத்திய இப்போட்டியில் இக்கல்லூரியின் வணிகவியல்,வணிக நிர்வாகவியல் துறை மற்றும் கணினி அறிவியல் துறை மாணவ/ மாணவியர்களும், எடப்பாடி,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.வி.எஸ் கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்,அரசு மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் மாணவ/ மாணவியர்களும் மொத்தமாக 206 மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ/ மாணவியர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. Debugging,ADZAP மற்றும் Dance போட்டிகளில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறப்பிடம் பெற்றது. இப்போட்டிகளுக்கு அனுபவம் மற்றும் வல்லுனதுவம் பெற்ற நடுவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.இதில் திருச்செங்கோடு,Livewire Training Service Pvt Ltd திருமதி P.ராஜேஸ்வரி மகேந்திரன் அவர்களும் Proprietor, Cynthiya Studio President: Eternal Sports Academy GOJUGAN Karate DO Tamil Nadu General Secretary,திரு. ஷிஹான். சிந்தியா கே. பாபு அவர்களும், தொழில் முனைவோர் திருமதி.U.ரதிப்பிரியா அவர்களும்,ECOTROPHY INNOVATIONS Pvt ltd நாட்டிய பாரதி சித்த மருத்துவர்.நிலா சக்ரவர்த்தி அவர்களும்,ராசிபுரம், லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி துறை தலைவர் திரு.K.சதீஷ் அவர்களும் கலந்து கொண்டு தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்தனர். முன்னதாக வரவேற்புரையினை கணினி பயன்பாட்டியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி M.பரமேஸ்வரி வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் பற்றிய அறிமுக உரையை கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.சு.கனிமொழி சுகுணா அவர்கள் வழங்கினார்.நன்றி உரையை கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.சீ.தாமோதரவதனி வழங்கினார் இந்நிகழ்வில் மாணவ/ மாணவியர்கள் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர் என்று விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Next Story