யானைகளை விரட்ட விடிய விடிய நடந்த தம்பட்ட கச்சேரி பொதுமக்கள் யாரும் தடை செய்யப்பட்ட பாதைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை
Virudhunagar King 24x7 |2 Sep 2024 2:34 PM GMT
யானைகளை விரட்ட விடிய விடிய நடந்த தம்பட்ட கச்சேரி பொதுமக்கள் யாரும் தடை செய்யப்பட்ட பாதைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகளை விரட்ட விடிய விடிய நடந்த தம்பட்ட கச்சேரி பொதுமக்கள் யாரும் தடை செய்யப்பட்ட பாதைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகத்தில் சுற்றித் திரியும் யானைகளை விரட்ட வனத்துறை சார்பில் விடிய விடிய தம்பட்ட கச்சேரி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம். இங்குள்ள செண்பகத் தோப்பு வனப்பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. விவசாய நிலங்களை காப்பாற்ற அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மின்வெளிகள் அமைத்து தங்களது நிலங்களை பாதுகாத்து வந்தனர். ஒரு சிலர் உயர் அழுத்த மின்சாரத்தை முறைகேடாக மின்வெளிகளில் இணைத்து விடுவதால் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழந்தும் வந்தன. இதனையடுத்து வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியே வரவிடாமல் தடுப்பதற்காகவும் அவைகளை வனத்திற்குள் விரட்டவும் ட்ரோன்கள் மூலம் யானைகள் கண்காணிக்கப்பட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டி வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுப்பதற்காக இரவு முழுவதும் வனத்துறை சார்பில் தம்பட்டம் அடித்து யானைகளை தடுத்து வருகின்றனர். மேலும் வனத்தில் ஆங்காங்கே தீப்பந்தங்கள் மூலமாகவும் யானைகள் வெளியே வராமல் தடுக்கப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் நடைபெற்ற தம்பட்ட கச்சேரியால் யானைகள் தங்களின் வசிப்பிடத்தை விட்டு வெளியே வராமல் இருந்ததாகவும் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடத்தப்படும் போது வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியே வந்து பொதுமக்களை அச்சுறுத்தவும் விளை நிலங்களை சேதப்படுத்தாது என வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
Next Story