வெள்ளகோவிலில் திமுக உறுப்பினர் கூட்டம் அமைச்சர்கள் கலந்து கொண்டார்
Tiruppur King 24x7 |2 Sep 2024 3:03 PM GMT
வெள்ளகோவிலில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் அமைச்சர் கலந்து கொண்டார்
திருப்பூர் தெற்கு மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியம் நகரம் மற்றும் முத்தூர்.பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிரகாஷ் எம் பி ஆகியோர் பங்கேற்று பேசினார். திமுக மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் 25 மூத்த நிர்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் வரும் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story