மருத்துவமனை சாலையில் புதிய மின் விளக்குகள்
Thirukoilure King 24x7 |2 Sep 2024 7:11 PM GMT
விளக்குகள்
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில் இருந்து மருத்துவமனை வரை உள்ள சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து அந்த சாலையில் பொதுமக்கள் செல்லவே அச்சமடைந்தனர். சாலையின் இருபுறங்களிலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சிறுவங்கூர் ஊராட்சி பொது நிதி 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மின்கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த புதிய மின் விளக்குகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு மின் விளக்குகளை மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். மருத்துவ கல்லுாரி டீன் நேரு, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஆத்மா குழு தலைவர் வெங்கடாசலம், ஒன்றிய துணைச் சேர்மன் விமலா முருகன், ஊராட்சி தலைவர் சந்திரா உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Next Story