திமுக பொது உறுப்பினர் கூட்டம்- பங்கேற்று பேசிய அமைச்சர்!

குடிமங்கலம் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலம் வடக்கு,கிழக்கு,மேற்கு ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில் பெதப்பம்பட்டி G.K மஹாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story