தமிழ்நாடுஅரசு ஊழியர்கள் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

தமிழ்நாடுஅரசு ஊழியர்கள் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமையில் திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். அந்த கொடுஞ்செயலை கண்டித்தும் அதற்கு நீதி வேண்டியும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக இன்று நூதன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுகந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story